அறன்வலியுறுத்தல்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
. குரல் என் 31
விளக்கம்

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
.குரல் என் 32
விளக்கம்


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
.குரல் என் 33
விளக்கம்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
.குரல் என் 34
விளக்கம்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
.குரல் என் 35
விளக்கம்


அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
குரல் என் 36
விளக்கம்

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
குரல் என் 37
விளக்கம்


வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
குரல் என் 38
விளக்கம்


அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
குரல் என் 39
விளக்கம்


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
.குரல் என் 40
விளக்கம்