கடவுள் வாழ்த்து


குறள் விளக்கம் :
மு.வ : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது
கருணாநிதி : அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
சாலமன் பாப்பையா : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது


With alpha begins all alphabets; And the world with the first Bagavan.


Kural Explanation :
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world






குறள் விளக்கம் :
மு.வ :தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன
கருணாநிதி :தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்?
சாலமன் பாப்பையா :தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

No fruit have men of all their studied lore, Save they the ‘Purely Wise One’s’ feet adore..

Kural Explanation :
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?





குறள் விளக்கம் :


மு.வ :அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

கருணாநிதி :மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
சாலமன் பாப்பையா : மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்


His feet, ‘Who o’er the full-blown flower hath past,’ who gain
In bliss long time shall dwell above this earthly plain.

Kural Explanation :
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.